கிரிக்கெட்

சாஹலின் டிக்டாக் வீடியோக்கள்: கே.எல் ராகுல் கூறிய வேடிக்கையான பதில் + "||" + Should Stick To Bowling Googlies: KL Rahul's Funny Take On Yuzvendra Chahal's TikTok Videos

சாஹலின் டிக்டாக் வீடியோக்கள்: கே.எல் ராகுல் கூறிய வேடிக்கையான பதில்

சாஹலின் டிக்டாக் வீடியோக்கள்: கே.எல் ராகுல் கூறிய வேடிக்கையான பதில்
யுஸ்வேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோக்களை கே.எல் ராகுல் வேடிக்கையான பதிலை அளித்துள்ளார்.
மும்பை,

கே.எல் ராகுல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், #AskKL என்ற அமர்வில் ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது, கே.எல்.ராகுல் இந்திய அணி  வீரர் யுஸ்வேந்திர சாஹலுக்கு ஒரு வேடிக்கையான ஆலோசனையை வழங்கினார். அவர் சமீபத்தில் அவர் தனது வேடிக்கையான டிக்டாக் வீடியோக்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

யுஸ்வேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோக்கள் குறித்த தனது கருத்துக்கள் குறித்து ஒரு ரசிகர் கே.எல்.ராகுலிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன், சுழற்பந்து வீச்சாளர் களத்தில் கூக்ளிகள் வீசுவதில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார். அவர் களத்தில் கூக்ளிகள் வீசுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கே.எல்.ராகுல் பதிலளித்தார்.

இந்திய பேட்ஸ்மேனுக்கு பிடித்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஏபி டி வில்லியர்ஸ் பெயரை குறிப்பிட்டார்.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகல் கே.எல் ராகுல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அனுபவித்து வருகிறார்.