கிரிக்கெட்

சுயநலவாதி யார்? - வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் பதில் + "||" + Who is selfish? - Steve Walk's response to Warne's accusation

சுயநலவாதி யார்? - வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் பதில்

சுயநலவாதி யார்? - வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் பதில்
சுயநலவாதி யார் என்று கூறிய வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் பதில் அளித்துள்ளார்.
மெல்போர்ன்,

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்-அவுட்டில் தொடர்புடைய வீரர்களின் பட்டியலை ‘கிரிக்இன்போ’ இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் முதலிடத்தில் உள்ளார். அவர் பேட்டிங் செய்யும் போது ஏற்பட்ட ரன்-அவுட் நிகழ்வு மொத்தம் 104. இதில் அவரே ரன்-அவுட்டில் வீழ்ந்தது 31 முறை. எதிர்முனையில் நின்ற சக பேட்ஸ்மேன்கள் ரன்-அவுட் ஆனது 73 தடவை. இந்த பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் 2-வது இடத்திலும் (ரன் அவுட்டில் தொடர்பு 101), சச்சின் தெண்டுல்கர் 3-வது இடத்திலும் (98) உள்ளனர். இந்த புள்ளி விவரத்தை சுட்டிகாட்டி பேசிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, ‘ஸ்டீவ் வாக்கை நான் வெறுக்கவில்லை. எனது கணிப்பில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய சிறந்த அணியில் அவரையும் தேர்வு செய்திருந்தேன். ஆனால் என்னுடன் விளையாடிய வீரர்களில் ஸ்டீவ் வாக்கை விட சுயநலம் கொண்டவர் யாரும் கிடையாது. புள்ளிவிவரங்களே அதற்கு சாட்சி. இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன்’ என்றார்.

அவரது குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் இப்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும் போது, ‘மக்கள் இதை தொன்று தொட்டு வரும் நீண்ட கால பகை என்று பேசிக்கொள்கிறார்கள். என்னை பொறுத்தவரை இது இரு நபர்களுக்கு இடையே உள்ள பகை மட்டுமே. அதிலும் நான் ஒரு போதும் வில்லங்கத்தை கொண்டு வந்ததில்லை. அதனால் இது ஒரு நபர் சார்ந்த விஷயம் தான். வார்னேவின் கருத்துகள் அவரை பற்றி தான் பிரதிபலிக்கிறது. மற்றபடி இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் : அதிமுக ஆட்சியில் அதிகார அத்துமீறல்கள் எளிய மக்கள் மீது ஏவிவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு
விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
2. என் மீது இனவெறி துஷ்பிரயோகம்; இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் குற்றச்சாட்டு
எனக்கு எதிராக சமூக ஊடகங்களில் இனவெறி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
3. முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது என்று அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
4. மண்டபத்தில் பழுதாகி கிடக்கும் கடலோர போலீஸ் ரோந்து படகுகள் இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டு
மண்டபத்தில் பல மாதங்களாக கடலோர போலீசாருக்கு வழங்கப்பட்ட ரோந்து படகுகள் பழுதாகி கிடக்கின்றன. இவை இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
5. கொரோனா விவகாரத்திலும் தி.மு.க. அரசியல் செய்து மக்களை குழப்பி வருகிறது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
கொரோனா விவகாரத்திலும் தி.மு.க. அரசியல் செய்து மக்களை குழப்பி வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.