கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை டிசம்பர் 3-ந் தேதி தொடங்க முடிவு? + "||" + The India-Australia Test series to start on December 3rd?

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை டிசம்பர் 3-ந் தேதி தொடங்க முடிவு?

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை டிசம்பர் 3-ந் தேதி தொடங்க முடிவு?
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை டிசம்பர் 3-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிஸ்பேன், 

இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 3-ந்தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 11-ந் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந் தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3-ந் தேதியும் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிலெய்டில் நடைபெற இருக்கும் 2-வது டெஸ்ட் பகல்-இரவு ஆட்டமாக அரங்கேற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியினரை தனிமைப்படுத்தி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.