கிரிக்கெட்

கோலியுடன் நட்புறவு; வில்லியம்சன் நெகிழ்ச்சி + "||" + Friendly with the kohli; Williamson elasticity

கோலியுடன் நட்புறவு; வில்லியம்சன் நெகிழ்ச்சி

கோலியுடன் நட்புறவு; வில்லியம்சன் நெகிழ்ச்சி
கோலியுடன் நட்புறவு குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், ஆன் லைன் மூலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசும் போது கூறியதாவது:-

நானும், இந்திய கேப்டன் விராட் கோலியும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது (2008-ம் ஆண்டு) முதல்முறையாக சந்தித்தோம். இளம் வயதிலேயே கோலியை சந்தித்தது சிறப்பான விஷயம். அதன் பிறகு அவரது முன்னேற்றத்தையும், கிரிக்கெட் பயணத்தையும் தொடர்ந்து பார்க்கிறேன். அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கொருவர் எதிராக விளையாடி வருகிறோம். அதுவும் நீண்ட காலம் இது தொடர்ந்து கொண்டிருப்பது சுவாரஸ்யமானது. இப்போது எங்களுக்குள் நல்ல நட்புறவு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் தொடர்பான எங்களது கண்ணோட்டத்தையும், நேர்மறையான எண்ணங்கள், சில பொதுவான விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். இருப்பினும் களத்தில் எங்களது அணுகுமுறையில் சிறிய வித்தியாசங்கள் இருக்கும். அதுவே எங்களது தனித்துவமாக இருக்கலாம்.

இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.