ஐ.சி.சி. தலைவராக இருந்த ஷசாங் மனோகர் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார் - என்.சீனிவாசன் குற்றச்சாட்டு


ஐ.சி.சி. தலைவராக இருந்த ஷசாங் மனோகர் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார் - என்.சீனிவாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 July 2020 12:56 AM GMT (Updated: 3 July 2020 12:56 AM GMT)

ஐ.சி.சி. தலைவராக இருந்தஷசாங் மனோகர் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார் என்று என்.சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக 2 முறை இருந்த இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஷசாங் மனோகரின் பதவி காலம் முடிந்ததால் நேற்று முன்தினம் அந்த பதவியில் இருந்து விலகினார். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.சி.சி. தலைவராக இருந்த காலத்தில் ஷசாங் மனோகர் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தினார் என்பதே எனது கருத்து.

அவர் அந்த பதவியில் இருந்து விலகியது இந்திய கிரிக்கெட்டில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும். கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியையும், ஐ.சி.சி.யில் இந்தியாவுக்குரிய வாய்ப்புகளையும் அவர் சீர்குலைத்தார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கையாண்ட அவர் உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்து பலன்களை அனுபவித்த ஷசாங் மனோகர் அந்த பதவியில் நீடிக்க முடியாது என்று தெரிந்ததும் ஐ.சி.சி.க்கு தாவினார். அதுபோல் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தனக்கு ஆதரவு எதுவும் கிடைக்காது என்பதை உணர்ந்ததும் ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்’ என்றார்.

Next Story