கிரிக்கெட்

தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை + "||" + My Best Friend, Teammate And Captain": MS Dhoni Turns 39, Wishes Pour In

தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை

தோனிக்கு இன்று  பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ராஞ்சி,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழந்தவரும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி இன்று  39- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தோனியின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் தோனிக்கு சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பிடித்து உள்ள தோனியின் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழிகிறது. டிரெண்டிங்கிலும் #HappyBirthdayDhoni  என்ற ஹேஷ்டேக் முன்னணியில் இருந்து வருகிறது.

தோனியை பெருமைப்படுத்தும் விதத்தில் அவருடைய பிறந்தநாளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ வெளியிட்டு சிறப்பாக கொண்டாடியுள்ளது.  

எம்.எஸ்.தோனியின் பிறந்தநாள் பரிசாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பிராவோ எழுதிய பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்ட இந்தப் பாடலுடன்,  “ஹெலிகாப்டர் 7 புறப்பட்டது! தோனிக்கு வாழ்த்து கூறிய  டுவைன் பிராவோ, ஹேப்பி பர்த் டே தோனி" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது.

அதேபோல், தோனியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக கருதப்படுபவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னாவும் தனது வாழ்த்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இருந்து திரும்பும் போது சேப்பாக்கம் மைதானத்தை படம் பிடித்த பிரதமர் மோடி!
சென்னையில் இருந்து திரும்பும் போது பிரதமர் மோடி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை படம் பிடித்துள்ளார்.
2. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி திணறல்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.
3. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
4. 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்தது தென்ஆப்பிரிக்கா
பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது.
5. இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல, மத்திய பட்ஜெட் வழிவகுக்கும் -நிர்மலா சீதாராமன்
இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல, மத்திய பட்ஜெட் வழிவகுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.