கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி; சாம் பில்லிங்ஸ் சதம் ‘வீண்’ + "||" + Australia win first match against England; Sam Billings' century 'in vain'

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி; சாம் பில்லிங்ஸ் சதம் ‘வீண்’

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி; சாம் பில்லிங்ஸ் சதம் ‘வீண்’
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
மான்செஸ்டர்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 294 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் (77 ரன்), மிட்செல் மார்ஷ் அரைசதம் (73 ரன்) அடித்தனர். அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து ஜாசன் ராய் (3 ரன்), ஜோ ரூட் (1 ரன்), கேப்டன் மோர்கன் (23 ரன்), விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (1 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை 57 ரன்களுக்குள் இழந்து தவித்தது.

இதன் பின்னர் ஜானி பேர்ஸ்டோவும், சாம் பில்லிங்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 170 ரன்களாக உயர்ந்த போது பேர்ஸ்டோ (84 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்) ‘லாங் ஆன்’ திசையில் தூக்கியடித்த பந்தை ஹேசில்வுட் பாய்ந்து விழுந்து பிடித்து திருப்பத்தை ஏற்படுத்தினார். இதன் பின்னர் விக்கெட் சரிவுக்கு மத்தியில் சாம் பில்லிங்ஸ் (118 ரன், 110 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) தனது முதலாவது சதத்தை விளாசியும் பலன் இல்லை. 50 ஓவர்களில் இங்கிலாந்து அணியால் 9 விக்கெட்டுக்கு 275 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10 ஓவர்களில் 3 மெய்டனுடன் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் முதலாவது ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித்துக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தலையில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுகிறார். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது
வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வெஸ்ட்இண்டீஸ் 409 ரன்னும், வங்காளதேசம் 296 ரன்னும் எடுத்தன.
2. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வெற்றி
தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது.
3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி திரில் வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி திரில் வெற்றி.
4. இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
வானில் எதிரியின் இலக்கை அழிக்கும் இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.
5. இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.