கிரிக்கெட்

கவாஸ்கர் மீது அனுஷ்கா சர்மா சாடல் கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா? + "||" + my name to criticize the goalie’s game?

கவாஸ்கர் மீது அனுஷ்கா சர்மா சாடல் கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா?

கவாஸ்கர் மீது அனுஷ்கா சர்மா சாடல் கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லோகேஷ் ராகுலுக்கு இரண்டு கேட்ச்சுகளை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தவற விட்டார்.
மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லோகேஷ் ராகுலுக்கு இரண்டு கேட்ச்சுகளை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தவற விட்டார். பீல்டிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சொதப்பிய கோலி 1 ரன்னில் அவுட் ஆனார். இந்த ஆட்டத்தை இந்தியில் வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், விராட் கோலியை விமர்சித்ததோடு அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவையும் வம்புக்கு இழுத்தார். ‘ஊரடங்கு காலக்கட்டத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பவுலிங்கில் மட்டுமே பயிற்சி எடுத்திருக்கிறார். அந்த வீடியோ காட்சியை (கோலியும், அனுஷ்காவும் வீட்டில் ஜாலியாக கிரிக்கெட் ஆடிய வீடியோ) நானும் பார்த்தேன். ஆனால் இது அவருக்கு பெரிய அளவில் உதவப்போவதில்லை. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி இன்னும் நிறைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது அவருக்கே தெரியும்’ என்று கூறியபடி கவாஸ்கர் சிரித்தார்.


‘கோலியின் ஆட்டத்துக்காக அவரது மனைவியை குறை சொல்வது நாகரிகமற்றது. இரட்டை அர்த்த தொனியில் கவாஸ்கர் பேசியிருக்கிறார். அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்க வேண்டும்’ என்று ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் வலியுறுத்தியுள்னர்.

சர்ச்சையை கிளப்பிய கவாஸ்கரை, அனுஷ்கா சர்மாவும் காரசாரமாக கண்டித்துள்ளார். அவர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், ‘மரியாதைக்குரிய கவாஸ்கர்... உங்களது கருத்து அருவருக்கத்தக்கது என்பதே உண்மை. கணவரின் ஆட்டத்துக்காக அவரது மனைவியை குற்றம் சாட்டி இப்படியொரு மோசமான கருத்தை ஏன் தெரிவித்தீர்கள் என்பதை விளக்க வேண்டும். பல ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டை பற்றி வர்ணனை செய்யும் போது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மீது மதிப்பு அளித்து வந்துள்ளீர்கள் என்பதை அறிவேன். அப்படி இருக்கும் போது எங்களுக்கும் சரிசமமான மரியாதை அளித்திருக்க வேண்டாமா? எனது கணவரின் செயல்பாட்டை விமர்சிப்பதற்கு உங்கள் மனதில் நிச்சயம் வேறு வார்த்தைகள், வாக்கியங்கள் இருந்திருக்கும். அல்லது எனது பெயரை பயன்படுத்தினால் தான் பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களா?. இது 2020-ம் ஆண்டு. ஆனாலும் என்னை பொறுத்தவரை இன்னும் எதுவும் மாறவில்லை. எப்போது எனது பெயர் கிரிக்கெட் விஷயங்களில் இழுக்கப்படுவது நிறுத்தப்படுமோ? நீங்கள் ஒரு ஜாம்பவான். இந்த ஜென்டில்மேன் விளையாட்டில் உங்களது பெயர் உயர்ந்த இடத்தில் உள்ளது. நீங்கள் சொன்னதை கேட்ட போது, எனது மனதில் உணர்ந்ததை கூறியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே கவாஸ்கர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அனுஷ்காவை தான் குறைகூறவில்லை என்றும் கூறியுள்ளார்.