கிரிக்கெட்

’இதுவே கடைசி எச்சரிக்கை’ மன்கட் பற்றி அஷ்வின் கருத்து + "||" + IPL: 'First and final warning for 2020' - Ashwin tweets ' 'Mankading' alert

’இதுவே கடைசி எச்சரிக்கை’ மன்கட் பற்றி அஷ்வின் கருத்து

’இதுவே கடைசி எச்சரிக்கை’ மன்கட் பற்றி அஷ்வின் கருத்து
கடந்த வருட ஐபிஎல் போட்டி தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிய அஷ்வின், ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி ஆட்டமிழக்கச் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
துபாய்,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் நேற்று டெல்லி  கேபிடல்ஸ் அணி, 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்றது. இந்த போட்டியின் போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட் செய்கையில், அந்த அணியின் துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச், எதிர்முனையில் நின்ற போது அஷ்வின் பந்து வீசினார்.   அஷ்வின் பந்தை வீசுவதற்கு முன்பாகவே, பிஞ்ச் கிரீசை  விட்டு வெளியேறிவிட்டார்.

அப்போது அஸ்வின் 'மன்கட்' முறையில் பிஞ்சை ஆட்டமிழக்கச் செய்வதுபோல் எச்சரித்துவிட்டு சிரித்தாா். பிறகு கிரிஸூக்குள் நிற்கும்படி பிஞ்சை நடுவர் அறிவுறுத்தினார்.  இந்த நிலையில்,   ஆரோன் பிஞ்சை மன்கட் முறையில் ரன் அவுட் செய்யாதது குறித்து  டுவிட்டரில் அஷ்வின் கூறியிருப்பதாவது:-   இதுதான் இந்த வருடத்துக்கான முதலும் கடைசியுமான எச்சரிக்கை. இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். பிறகு என்னைக் குறை சொல்லவேண்டாம். மேலும், நானும் பிஞ்சும் நல்ல நண்பர்கள்” என்று கூறி இந்த டுவிட்டை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குக்கும் டேக் செய்திருந்தார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மன்கட் முறையில் எவரையும் ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என்று அஸ்வினிடம் தாம் கூறியுள்ளதாக  பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் போட்டி தொடங்கும் முன் பாண்டிங் கூறியிருந்தாா். கடந்த வருட ஐபிஎல் போட்டி தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிய அஷ்வின், ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி  ஆட்டமிழக்கச் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
2. ”கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் தொடரில் ”கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையாகும்.
3. ஐபிஎல் 2020: பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு
ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.
4. ஐபிஎல் தொடர்: லீக் சுற்றோடு சிஎஸ்கே வெளியேற்றம்- சாக்‌ஷி டோனி உருக்கமான பதிவு
இது ஒரு விளையாட்டு! யாரும் தோற்க விரும்புவதில்லை என சாக்‌ஷி டோனி பதிவிட்டுள்ளார்.
5. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது