‘பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடவில்லை’ சென்னை அணி கேப்டன் டோனி ஆதங்கம்


‘பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடவில்லை’ சென்னை அணி கேப்டன் டோனி ஆதங்கம்
x
தினத்தந்தி 8 Oct 2020 10:03 PM GMT (Updated: 8 Oct 2020 10:03 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 168 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுத்து அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. 51 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 81 ரன்கள் குவித்த கொல்கத்தா வீரர் ராகுல் திரிபாதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறுகையில், ‘மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியினர் 2-3 ஓவர்கள் அருமையாக பந்து வீசினார்கள். பிறகு இரண்டு மூன்று விக்கெட்டுகளை நாங்கள் அடுத்தடுத்து இழந்தோம். அந்த சமயத்தில் எங்களது பேட்டிங் நன்றாக இருந்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா நன்றாக பந்து வீசினார். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். ஒரு அணியாக அந்த ரன் இலக்கை நாங்கள் எட்டிப்பிடித்து இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்களின் முயற்சியை பேட்ஸ்மேன்கள் வீழ்த்திவிட்டார்கள். கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரிகள் வரவில்லை. இதுபோன்ற தருணங்களில் வித்தியாசமாக விளையாட முயற்சிக்க வேண்டும். சற்று எழும்பி வரும் வகையில் வீசப்படும் பந்துகளை பவுண்டரியாக மாற்ற வழிமுறை கண்டறிய வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தபடி நாங்கள் நன்றாக ஆடவில்லை’ என்றார்.

Next Story