கிரிக்கெட்

சென்னை அணி பேட்ஸ்மேன்கள் மீது ஷேவாக் தாக்கு ‘அரசாங்க வேலையில் இருப்பதாக நினைக்கிறார்கள்’ + "||" + Sehwag attacks Chennai batsmen

சென்னை அணி பேட்ஸ்மேன்கள் மீது ஷேவாக் தாக்கு ‘அரசாங்க வேலையில் இருப்பதாக நினைக்கிறார்கள்’

சென்னை அணி பேட்ஸ்மேன்கள் மீது ஷேவாக் தாக்கு ‘அரசாங்க வேலையில் இருப்பதாக நினைக்கிறார்கள்’
கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான ஆட்டத்தில் 168 ரன்கள் இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேசிங் செய்து வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான ஆட்டத்தில் 168 ரன்கள் இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேசிங் செய்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் கேதர் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா அதிகமான பந்துகளை வீணடித்ததால் வெற்றி கைநழுவி போய் விட்டது. என்னை பொறுத்தவரை சென்னை அணியில் சில பேட்ஸ்மேன்கள், அரசாங்க வேலையில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். அதாவது சிறப்பாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் எப்படியும் சம்பளம் வந்து விடும் என்று நினைக்கிறார்கள்’ என்றார்.