ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் டோனி பங்கேற்கிறாரா? + "||" + MS Dhoni to play BBL after completion of IPL 2020? Australian franchises keen to sign Indian veterans: Report
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் டோனி பங்கேற்கிறாரா?
பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைபெறுகிறது.
பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் டோனி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
இப்போது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் நவம்பர் 10 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனையடுத்து பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 2 ஆம் வாரத்தில் தொடங்குகிறது. இந்தாண்டு தொடரில் வெளிநாட்டு வீரர்களை பங்கேற்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்ற இந்திய வீரர்களை அணுக பிக் பாஷ் முடிவு செய்துள்ளது. இதில் மூன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களை அணுக பிபிஎல் முடிவு செயதுள்ளது. அதன்படி டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங்கை பிபிஎல் தொடரில் விளையாட வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது அப்போது அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது குறித்தும் , இரு புதிய அணிகளைச் சேர்ப்பது குறித்தும் முக்கிய முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.