கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி + "||" + South Africa wins Test innings against Sri Lanka

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி
தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது.
இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 396 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 621 ரன்களும் குவித்தன. 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 180 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் 5 வீரர்கள் காயத்தில் சிக்கியது பின்னடைவை ஏற்படுத்தியது.

 ‘நல்லவேளையாக நாங்கள் 21 வீரர்களை அழைத்து வந்தோம். இல்லாவிட்டால் அடுத்த டெஸ்டில் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் 3-வது வரிசையிலும், நான் 4-வது வரிசையிலும் ஆட வேண்டியது இருந்திருக்கும்’ என்று இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்தார். 

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய பயணிகள் இலங்கை வர தடை விதிப்பு - இலங்கை விமானத்துறை அமைச்சகம் அறிவிப்பு
இந்திய பயணிகள் இலங்கை வர தடை விதிக்கப்படுவதாக, இலங்கை விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
2. சீன ராணுவ மந்திரி இலங்கையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீன ராணுவ மந்திரி இலங்கை சென்றார்.
3. 2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: "இந்தியாவின் உதவியை நாடுவோம்" - இலங்கை அமைச்சர்
2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் என்று இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
4. 54 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை தனது சுயரூபத்தை காட்டியுள்ளது - மீனவ அமைப்பு கருத்து
ஐ.நா. சபை தீர்மான விவகாரத்தால்தான் 54 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை அரசு தனது சுய ரூபத்தை காட்டியுள்ளது என மீனவ அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
5. இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்காததற்கு வைகோ கண்டனம்
ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.