டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல்முறையாக முதலிடத்தை பிடித்தது


டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல்முறையாக முதலிடத்தை பிடித்தது
x
தினத்தந்தி 6 Jan 2021 10:42 PM GMT (Updated: 6 Jan 2021 10:42 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.

துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை முழுமையாக வென்றதன் மூலம் 2 தரவரிசை புள்ளிகளை கூடுதலாக பெற்று முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையை அலங்கரித்து இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் ‘நம்பர் ஒன்’ இடத்தை எட்டிய 7-வது அணி நியூசிலாந்து ஆகும்.


டெஸ்ட் தரவரிசையில் ‘டாப்-5’ இடங்களை பிடித்துள்ள அணிகள் வருமாறு:-

தரவரிசை அணி புள்ளி

1. நியூசிலாந்து 118

2. ஆஸ்திரேலியா 116

3. இந்தியா 114

4. இங்கிலாந்து 106

5. தென்ஆப்பிரிக்கா 96


Next Story