கிரிக்கெட்

கேட்ச்களை நழுவவிட்ட ரிஷாப் பண்டுக்கு பாண்டிங் அறிவுரை + "||" + Ponting advice to Rishabh Pandey who missed the catches

கேட்ச்களை நழுவவிட்ட ரிஷாப் பண்டுக்கு பாண்டிங் அறிவுரை

கேட்ச்களை நழுவவிட்ட ரிஷாப் பண்டுக்கு பாண்டிங் அறிவுரை
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனதில் இருந்து உலகின் வேறு எந்த விக்கெட் கீப்பர்களையும் விட அதிகமாக கேட்ச்களை தவற விட்டது ரிஷாப் பண்ட் தான்.
சிட்னி, 

இந்திய டெஸ்ட் அணியில் அனுபவ விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் சிட்னி டெஸ்டின் முதல் நாளில் புகோவ்ஸ்கிக்கு இரண்டு கேட்ச்களை நழுவவிட்டு சொதப்பினார். இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது ரிஷாப் பண்டுக்கு பயிற்சி அளித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் கூறுகையில், ‘ரிஷாப் பண்ட் விட்ட இரு கேட்ச்களில் ஒன்றை எளிதில் பிடித்திருக்கலாம். ஆனாலும் ரிஷாப் பண்டுக்கு அதிர்ஷ்டம் என்னவென்றால் ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்த நிலையில் புகோவ்ஸ்கி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சதமோ, இரட்டை சதமோ அடிக்காமல் போனது தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனதில் இருந்து உலகின் வேறு எந்த விக்கெட் கீப்பர்களையும் விட அதிகமாக கேட்ச்களை தவற விட்டது ரிஷாப் பண்ட் தான். தனது விக்கெட் கீப்பிங் திறமையை மேம்படுத்த அவர் இன்னும் உழைக்க வேண்டும்’ என்றார்.