‘வீரர்களின் காயத்துக்கு ஐ.பி.எல். போட்டியே காரணம்’ ஆஸ்திரேலிய பயிற்சியாளர் சொல்கிறார்


‘வீரர்களின் காயத்துக்கு ஐ.பி.எல். போட்டியே காரணம்’ ஆஸ்திரேலிய பயிற்சியாளர் சொல்கிறார்
x
தினத்தந்தி 14 Jan 2021 12:51 AM GMT (Updated: 14 Jan 2021 12:51 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும்.

பிரிஸ்பேன், 

கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அங்கிருந்து நேராக ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணியில் முகமது ஷமி, ஜடேஜா, லோகேஷ் ராகுல் உள்பட இதுவரை 9 பேர் காயமடைந்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் வார்னர் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் வீரர்களின் காயத்துக்கு ஐ.பி.எல். போட்டியே காரணம் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் குற்றம் சாட்டியுள்ளார். ‘இந்த கோடை கால சீசன் முழுவதும் எத்தனை வீரர்கள் காயத்தில் சிக்குகிறார்கள் என்பதை பார்ப்பது உண்மையிலேயே சுவாரஸ்யமானது தான். இதில் நான் செய்வதற்கு எதுவும் இல்லை. அனேகமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்த முறை சரியான நேரத்தில் நடக்கவில்லை என்று கருதுகிறேன். அதுவும் இது போன்ற பெரிய தொடருக்கு முன்பாக நடந்ததால் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. ஐ.பி.எல். போட்டி எனக்கு பிடிக்கும். இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்த அது உதவுகிறது. ஆனால் கொரோனா பிரச்சினையால் தள்ளிவைக்கப்பட்டு, அதன் பிறகு நடந்த கால சூழல் தான் பொருத்தமாக இல்லை’ என்று லாங்கர் குறிப்பிட்டார்.


Next Story