கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: தமிழக அணி 4-வது வெற்றி + "||" + Syed Mushtaq Ali Cricket: Tamil Nadu team won the 4th

சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: தமிழக அணி 4-வது வெற்றி

சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: தமிழக அணி 4-வது வெற்றி
சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.
கொல்கத்தா, 

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. கொல்கத்தாவில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஐதராபாத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. 

தொடர்ந்து ஆடிய தமிழக அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 78 ரன்களும் (51 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 40 ரன்களும் (30 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெற்றிக்கு வித்திட்டனர். தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்த தமிழக அணி கால்இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: சென்னை உள்பட 6 இடங்களில் நடக்கிறது
38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.