கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 22 ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலிய பெண்கள் அணி உலக சாதனை + "||" + The Australian women's team set a world record by winning 22 consecutive matches in ODI cricket

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 22 ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலிய பெண்கள் அணி உலக சாதனை

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 22 ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலிய பெண்கள் அணி உலக சாதனை
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 22 ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலிய பெண்கள் அணி உலக சாதனை படைத்தது.
மவுன்ட் மாங்கானு, 

மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 38.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அலிசா ஹீலி (65 ரன்), எலிஸ் பெர்ரி (56 ரன்), ஆஷ்லி கார்ட்னெர் (53 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக பெற்ற 22-வது வெற்றி இதுவாகும். ஒரு நாள் போட்டி வரலாற்றில் இது புதிய சாதனையாகும். 

இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 ஆட்டங்களில் (2003-ம் ஆண்டு) வென்றதே உலக சாதனையாக இருந்தது. 18 ஆண்டுகால அச்சாதனையை அந்த நாட்டு பெண்கள் அணி முறியடித்திருக்கிறது.