கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்குப் பிறகு டோனி கூறியது என்ன?


கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்குப் பிறகு டோனி கூறியது என்ன?
x
தினத்தந்தி 21 April 2021 7:46 PM GMT (Updated: 21 April 2021 7:46 PM GMT)

கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18- ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது. போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:- 

“ஆட்டத்தின்  16-வது ஓவரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையேயான போட்டியாகத்தான் இன்றைய ஆட்டம் இருந்தது. நீங்கள் அதிகமாக எதையும் செய்ய முடியாது. வெவ்வேறு விதமான பீல்டுகளை அமைக்க முடியாது. அவர்களுக்கு கூடுதல் விக்கெட்டுகள் கைவசம் இருந்திருந்தால் ஆட்டம் வேறு விதமாக இருந்திருக்கலாம். கிரிக்கெட்டில் இதுபோன்றவற்றை போதுமான அளவுக்கு பார்த்திருக்கிறோம்.  நீங்கள் ரன்கள் குவித்து விட்டீர்கள் என்பதால் எதிரணி அடிக்காது என்பதற்கு எந்த ஒரு நல்ல காரணமும் கிடையாது. 

 நான் அணியினருக்கு சொன்ன வரிகள் என்னவெனில், நாம்  நல்ல ரன்களை அடித்து விட்டோம். ஆனால் நாம் பொறுப்புடன் விளையாட வேண்டும். அதிக அளவு விக்கெட்டுகளை விரைவாக எடுக்க விரும்பக்கூடாது. ஏனெனில் அதிரடியாக ஆடக்கூடியவர்கள் வந்த பிறகு 200 ரன்கள் என்பதால், அவர்கள் ஆடுவதற்கு ஒரே வழிதான் உள்ளது. நீங்கள் பெரிய அளவில் எதையும் செய்ய முடியாது. ஜடேஜா மட்டும்தான் ஒரே ஆப்ஷனாக இருந்தார்” என்றார்.


Next Story