ஐபிஎல் ஊதியத்தில் ஒரு பகுதியை கொரோனா நிவாரண நிதியாக அளிக்க பூரன் முடிவு


ஐபிஎல்  ஊதியத்தில் ஒரு பகுதியை கொரோனா நிவாரண நிதியாக அளிக்க பூரன் முடிவு
x
தினத்தந்தி 30 April 2021 11:59 AM GMT (Updated: 30 April 2021 11:59 AM GMT)

ஐபிஎல் ஊதியத்தில் ஒரு பகுதியை கொரோனா நிவாரண உதவியாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சைக்கு ஆக்சிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. 

கொரோனாவால் பாதித்தவர்களின் சிகிச்சைக்கு உதவ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் முதன் முதலாக அறிவித்தார். இதையடுத்து மேலும் சில வீரர்கள் நிதி உதவியை அளிக்க முன்வந்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரருமான நிகோலஸ் பூரன், தனது ஐபிஎல் ஊதியத்தில் ஒரு பகுதியை கொரோனா நிவாரண உதவியாக அளிப்பதாக தெரிவித்துள்ளார். நிகோலஸ் பூரன் தனது டுவிட்டரில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-  

கொரோனா பெருந்தொற்றால் பல நாடுகள் கடும் சவாலை இன்னும் சந்தித்து கொண்டிருந்தாலும் இந்தியாவில் நிலவும் சூழல் மிக மோசமாக உள்ளது. இந்த மோசமான சூழலில் எனது ஊதியத்தில் ஒரு பகுதியை நான் வழங்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகமும் ஆக்சிஜன் செறிவூட்டிகள்  கிடைக்க நிதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.


Next Story