கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 251 ரன்னில் ஆல்-அவுட் + "||" + Test against Sri Lanka: Bangladesh all out for 251 runs

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 251 ரன்னில் ஆல்-அவுட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 251 ரன்னில் ஆல்-அவுட்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 251 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பல்லகெலே, 

இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 469 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 83 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 92 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரமா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து 242 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 17 ரன் எடுத்து மொத்தம் 259 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.