கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐ.பி.எல். போட்டியில் ஆடிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு + "||" + IPL in Test series against New Zealand players played in the tournament has no chance; England Cricket Board decision

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐ.பி.எல். போட்டியில் ஆடிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐ.பி.எல். போட்டியில் ஆடிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்று 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் லண்டனில் ஜூன் 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் ஜூன் 10-ந் தேதியும் தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணி வீரர்களான கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், மொயீன் அலி, ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் கிடைக்காது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் இருந்து நாடு திரும்பிய அவர்கள் இந்த வாரத்தில் தான் தங்களது தனிமைப்படுத்துதலை முடிக்க இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கும் வகையில் இந்த முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்து இருப்பதாக தெரிகிறது. இதனால் நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.