கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் லபுஸ்சேனுக்கு இடமில்லை + "||" + Labuschagne has no place in the Australian squad for the West Indies series

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் லபுஸ்சேனுக்கு இடமில்லை

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் லபுஸ்சேனுக்கு இடமில்லை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதம் வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான 23 பேர் கொண்ட ஆஸ்திரேலிய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து இந்த மாத கடைசியில் இறுதி அணி முடிவு செய்யப்படும். கடந்த மார்ச் மாதம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறாத ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கின்றனர். 26 வயது பேட்டிங் ஆல்-ரவுண்டரான மார்னஸ் லபுஸ்சேன் பெயர் அணியில் இடம் பெறவில்லை. இங்கிலாந்தில் கவுண்டி போட்டியில் விளையாடி வரும் லபுஸ்சேன் பயண கட்டுப்பாடு காரணமாக நாடு திரும்புவதில் சிக்கல் இருப்பதால் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி - கராச்சியில் இன்று நடைபெறுகிறது
நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்றது
மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக வெஸ்ட்இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்றது.