இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்டில் 3-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து


இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்டில் 3-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து
x
தினத்தந்தி 4 Jun 2021 5:29 PM GMT (Updated: 2021-06-04T22:59:14+05:30)

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அறிமுக வீரர் டிவான் கான்வே (200 ரன்) இரட்டை சதம் விளாசினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 18 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும் ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் சரிவை தடுத்து நிறுத்தினர். 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 42 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய தினம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.


Next Story