இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றது


இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றது
x
தினத்தந்தி 28 Jun 2021 11:20 PM GMT (Updated: 2021-06-29T04:50:46+05:30)

இந்திய கிரிக்கெட் அணி நேற்று தனி விமானம் மூலம் இலங்கையில் உள்ள கொழும்பு நகருக்கு போய் சேர்ந்தது.

கொழும்பு, 

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்று இருப்பதால், ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் இலங்கையில் உள்ள கொழும்பு நகருக்கு போய் சேர்ந்தது. இந்திய அணியினர் ஓட்டல் அறையில் 3 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பார்கள். அவர்கள் வருகிற 2-ந் தேதி முதல் பயிற்சியை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை-இந்தியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை 13-ந் தேதி நடக்கிறது.

Next Story