கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி + "||" + 2nd ODI against Pakistan: England win by 52 runs

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
லண்டன், 

லண்டனில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. (மழை காரணமாக ஆட்டம் 47 ஒவர்களாக குறைக்கப்பட்டது) அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 60 ரன்களும், வின்ஸ் 56 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் ஹசன் அலில் 5 விக்கெட்டுகளும், ஹரிஸ் ரவு 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 41 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் சார்பில் ஷகில் 56 ரன்களும், ஹசன் அலி 31 ரன்களும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரிகோரி 3 விக்கெட்டுகளும், ஒவர்டோன், பர்கின்சன் மற்றும் மெக்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிக்கு எதிராக இங்கிலாந்தில் போராட்டம்
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிக்கு எதிராக இங்கிலாந்தில் போராட்டம் நடைபெற்றது.
2. நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்தானதற்கு காரணம் இந்தியா தான் - சொல்கிறது பாகிஸ்தான்
தங்கள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து கொலைமிரட்டல் வந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
3. பாகிஸ்தானில் இருதரப்பினர் இடையே மோதல் - துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி
பாகிஸ்தானில் இருதரப்பினர் இடையேயான மோதலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
4. பாகிஸ்தான் மதப்பள்ளிகூடத்தில் தலீபான்கள் கொடி: பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு!
பாகிஸ்தான் மதப்பள்ளிகூடத்தில் தலீபான்கள் கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
5. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்: மைக்கேல் வான்
கடைசி நேரத்தில் போட்டியை நியூசிலாந்து ரத்து செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டஅவமானம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்