டோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு மீண்டும் ‘புளு டிக்’ வசதி கிடைத்தது + "||" + Twitter Restores Blue Tick On MS Dhoni's Account After Removing It Briefly
டோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு மீண்டும் ‘புளு டிக்’ வசதி கிடைத்தது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியை டுவிட்டரில் சுமார் 82 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
ராஞ்சி,
பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை உறுதி செய்து புளு டிக் வசதியை சமூக வலைத்தளங்கள் வழங்கி வருகின்றன. அதுபோல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் ட்விட்டர் கணக்குக்கும் ப்ளூ டிக் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 8.20 மில்லியன் பாலோயர்கள் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் அதிகாரப்பூர்வ பக்கத்தின் புளு டிக் குறியீட்டை நேற்று டுவிட்டர் நிறுவனம் திடீரென நீக்கியது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பேசுபொருளானது. இதையடுத்து,
இதுகுறித்து விளக்கமளித்த டுவிட்டர் நிறுவனம் டோனியின் டிவிட்டர் கணக்கானது நீண்டநாள் பயன்பாட்டில் இல்லாததால் புளு டிக் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டோனியின் டுவிட்டர் கணக்கில் மீண்டும் புளு டிக் இணைக்கப்பட்டுள்ளது.