இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்ப்பு


இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்ப்பு
x
தினத்தந்தி 11 Aug 2021 5:53 AM GMT (Updated: 2021-08-11T11:23:12+05:30)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இல்லாததால் இங்கிலாந்து சரியான கலவையில் அணியை இறக்குவதில் தடுமாறுகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் பேட்டிங்கில் கேப்டன் ஜோ ரூட் தவிர மற்றவர்கள் திணறினார்கள். இந்த குறையை சரி செய்வதற்காக மொயீன் அலி அழைக்கப்பட்டு உள்ளார்.

Next Story