“இந்தியா போட்டியை இழந்தது” என வெளியிட்ட அறிக்கையை மாற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்


“இந்தியா போட்டியை இழந்தது” என வெளியிட்ட அறிக்கையை மாற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
x
தினத்தந்தி 10 Sep 2021 11:38 AM GMT (Updated: 2021-09-10T17:08:17+05:30)

கொரோனா அச்சுறுத்தால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இந்தியா தங்கள் கிரிக்கெட் அணியை களமிறக்க முடியாமல் போனதால் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியை இழந்தது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முதலில் தெரிவித்து இருந்தது. பின்னர் உடனடியாக இங்கிலாந்து வாரியம் புதிய அறிக்கையை வெளியிட்டது, அதில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டை இந்தியா இழந்தது என்ற குறிப்பு மாற்றப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர், பிசியோதெரபி உள்ளிட்டோர் அடுத்தடுத்து தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். 

இந்திய அணியினருக்கு நடத்தப்பட்டு இருக்கும் கொரோனா பரிசோதனையின் யாருக்கும் கொரோனா இல்லை  என சோதனை முடிவுகள் வெளியானது. இருந்தாலும் 5 வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ரத்து செய்யப்பட்ட இந்த போட்டியை வேறு ஒரு தருணத்தில் நடத்துவது பற்றி இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Next Story