கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் லிசெல் லீ முதலிடத்துக்கு முன்னேற்றம் + "||" + South Africa's Lizelle Lee in joint-first position with Mithali Raj in ICC WODI batting rankings

ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் லிசெல் லீ முதலிடத்துக்கு முன்னேற்றம்

ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் லிசெல் லீ முதலிடத்துக்கு முன்னேற்றம்
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (762 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 91 ரன்கள் குவித்ததன் பலனாக தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கனை லிசெல் லீ (762 புள்ளிகள்) மிதாலி ராஜூடன் இணைந்து ‘நம்பர் ஒன்’ இடத்தை பகிர்ந்துள்ளார். அவர் 3-வது முறையாக முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி (756 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இந்திய வீராங்கனை மந்தனா (701 புள்ளிகள்) 9-வது இடத்திலும் தொடருகின்றனர்.