கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா + "||" + IPL Cricket Kolkata set a target of 172 for Rajasthan

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 171 ரன்கள் குவித்தது.
சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 54-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இதில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் ஓரளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றை எட்டி விடலாம் என்ற நிலையில் இருக்கிறது.

அதே சமயம் 10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் இமாலய வெற்றியை ருசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இவர்களது ஜோடியில் கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. வெங்கடேஷ் ஐயர் 3 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் திவாட்டியா வீசிய பந்தில் பவுல்ட் ஆனார்.

அடுத்து வந்த நிதிஷ் ராணா 12 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். 3 பவுண்டரிகளை விளாசிய ராகுல் திரிபாதி, 21 ரன்களில் பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடி அரைசதத்தைக் கடந்த ஷுப்மன் கில்(4 பவுண்டரிகள், 2 சிக்சர்) 56 ரன்களில் கேட்ச் ஆனார்.

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இந்த ஆண்டு சார்ஜாவில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தினேஷ் கார்த்திக்(14) மற்றும் இயன் மார்கன்(13) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ராகுல் திவாட்டியா மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகிய நால்வரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி தற்போது விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதிவியேற்பு
ராஜஸ்தானின் புதிய மந்திரி சபை இன்று பதவியேற்றுக்கொண்டது.
2. ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
3. ஆச்சரியப்பட வைக்கும் ‘இந்திய பெருஞ்சுவர்’!
உலகின் மிக நீளமான சுவராக விளங்கும் சீனப்பெருஞ்சுவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவிலும் நீளமான சுவர் கொண்ட கோட்டை ஒன்று இருக்கிறது. அதனை பலரும் அறிந்திராத நிலை உள்ளது. ‘இந்தியாவின் பெருஞ்சுவர்’ என்று அழைக்கப்படும் அந்த சுவர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கிறது.
4. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.