கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் அடுத்த ஆண்டு டோனி விளையாடுவாரா? + "||" + Next year IPL Will MS Dhoni play in the tournament ?

ஐ.பி.எல். போட்டியில் அடுத்த ஆண்டு டோனி விளையாடுவாரா?

ஐ.பி.எல். போட்டியில் அடுத்த ஆண்டு டோனி விளையாடுவாரா?
சென்னை அணிக்காக நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா? என்று வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு டோனி பதிலளிக்கையில் 'பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்’ என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று மாலை நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘டாஸ்’ போட்ட பிறகு, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் சென்னை அணிக்காக நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா? என்று வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு 40 வயதான கேப்டன் டோனி பதிலளிக்கையில், ‘அடுத்த சீசனிலும் நீங்கள் என்னை மஞ்சள் நிற சீருடையில் பார்க்கலாம். ஆனால் நான் சென்னை அணிக்காக விளையாடுவேனா? என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஏனெனில் அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக நிறைய மாற்றங்கள் நடக்க இருக்கின்றன. இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்கவைத்து கொள்ளும் நடைமுறை எப்படி இருக்கும் என்பது தெரியாது. அதேபோல் ஏலத்தில் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு பணம் செலவிட முடியும் என்பதும் தெரியாது. இப்படிப்பட்ட பல நிலையற்ற தன்மைகள் நிலவுவதால், உறுதியான விதிமுறை தெரிந்த பிறகு தான் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும். எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டி: இங்கிலாந்தில் இருந்து அமீரகம் வரும் வீரர்களை 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - இந்திய கிரிக்கெட் வாரியம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க இங்கிலாந்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருகை தரும் ஒவ்வொரு வீரர்களையும் 6 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று ஐ.பி.எல். அணி நிர்வாகங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
2. ஐ.பி.எல். போட்டியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகி உள்ளார்.