இருபது ஓவர் கிரிக்கெட்: கேப்டனாக டோனி புதிய சாதனை!


இருபது ஓவர் கிரிக்கெட்: கேப்டனாக டோனி புதிய சாதனை!
x
தினத்தந்தி 15 Oct 2021 4:52 PM GMT (Updated: 15 Oct 2021 8:17 PM GMT)

இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக டோனி 300 போட்டிகளில் விளையாடி புதிய சாதனையை படைத்தார்.

துபாய்,

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனையை படைத்த டோனி இன்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற ஐ.பி.எல்.லின் இறுதிப்போட்டியில் விளையாடியதின் மூலம் டோனி இருபது ஓவர்  கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 213 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில்130 வெற்றி மற்றும் 81 தோல்விகளும் அடங்கும். 

இந்தியாவுக்காக கேப்டன் பொறுப்பிலிருந்து 41 வெற்றியை  கொடுத்துள்ளார். இதில் தான் கேப்டன் பொறுப்பு வகித்த ஆரம்பக்கட்டத்திலே இந்தியாவுக்கு முதல் இருபது ஓவர் உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்த (2007) பெருமையும் அடங்கும்.

இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டேரன் சமி டி20 போட்டிகளில் 208 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களை தொடர்ந்து  இந்தியாவின் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் முறையே 170 மற்றும் 153 ஆட்டங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story