டி-20 உலகக்கோப்பை: பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி


டி-20 உலகக்கோப்பை: பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 19 Oct 2021 1:56 PM GMT (Updated: 19 Oct 2021 1:56 PM GMT)

பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அல் அமீரத்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் 5-வது ஆட்டம் இன்று மதியம் 2 மணிக்கு அல் அமீரத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. 

இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியுடன், பப்புவா நியூ கினியா அணி மோதியது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்காட்லாந்து வீரர் பெர்ரிங்டன் அதிகபட்சமாக 70 ரன்கள் விளாசினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது. 

அடுத்து பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்காட்லாந்து அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story