கிரிக்கெட்

“திறமை தான் நிரந்தரம்” - டேவிட் வார்னருக்கு ஆதரவு தெரிவித்த ஷேன் வார்னே + "||" + Talent is permanent Shane Warne backs David Warner

“திறமை தான் நிரந்தரம்” - டேவிட் வார்னருக்கு ஆதரவு தெரிவித்த ஷேன் வார்னே

“திறமை தான் நிரந்தரம்” - டேவிட் வார்னருக்கு ஆதரவு தெரிவித்த ஷேன் வார்னே
டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
துபாய்,
 
ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இந்த போட்டியின் சூப்பர் 12 சுற்று நாளை முதல் தொடங்குகிறது. அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 

இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர், சமீப காலமாக நடந்த ஆட்டங்களில் சிறப்பாக செயல்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் 0, 2 என ரன்கள் எடுத்த வார்னர், கடைசி ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். டி-20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களிலும் அவரது மோசமாக ஆட்டம் தொடர்ந்தது.

இந்த நிலையில் டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கிவிடக்கூடாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். டேவிட் வார்னர் குறித்து அவர் கூறுகையில், “டேவிட் வார்னர் மிகத்திறமையான வீரர். சமீபத்தில் அவர் சரியாக விளையாடவில்லை, நிறைய ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கும் வீரர்களில் ஒருவர். 

திறமை தான் நிரந்தரம். வார்னர் விஷயத்தில் இதுதான் சரி. எனவே அவரை அணியிலிருந்து நீக்கிவிடக் கூடாது. முதல் இரு ஆட்டங்கள் முக்கியமானவை. அவர் நன்றாக விளையாட ஆரம்பித்துவிட்டால் டி-20 உலகக் கோப்பை போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலை விபத்தில் சிக்கிய ஷேன் வார்னே: மருத்துவமனையில் அனுமதி...!
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது வலித்தது; டேவிட் வார்னர் வேதனை
தான் மிகவும் விரும்பிய அணியில் இருந்து எந்த தவறும் செய்யாமல் என்னை நீக்கியது வேதனை அளிப்பதாக வார்னர் தெரிவித்துள்ளார்
3. டி 20 கோப்பையை வெல்ல இரு அணிகளுக்கு வாய்ப்பு: வார்னே கருத்து
டி 20 உலக்கோப்பையை வெல்ல இரு அணிகளுக்கு வாய்ப்பிருப்பதாக ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.