கிரிக்கெட்

டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று கடைசி ஆட்டம்: இலங்கை அணி பந்துவீச்சு + "||" + T20 World Cup qualifiers last match Sri Lanka bowling

டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று கடைசி ஆட்டம்: இலங்கை அணி பந்துவீச்சு

டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று கடைசி ஆட்டம்: இலங்கை அணி பந்துவீச்சு
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சார்ஜா,

ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இலங்கை அணி ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. மேலும் இன்று நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நமீபியா அணியும் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இன்று நடைபெறும் கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து நெதர்லாந்து அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் இருந்து டெல்லி, இலங்கைக்கு விமான சேவை தொடங்கியது
திருச்சியில் இருந்து டெல்லி, இலங்கைக்கு விமான சேவை நேற்று முதல் தொடங்கியது.
2. இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் சொகுசு ரெயில்சேவை தொடக்கம்..!
இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் சொகுசு ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
3. 310 கிலோ எடை மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல் - இலங்கையில் கண்டுபிடிப்பு
தேசிய ரத்தினம் மற்றும் நகை ஆணையம் இந்த ரத்தினத்திற்கு சான்றளித்து, சர்வதேச சந்தையில் இதை விற்க அனுமதி அளித்துள்ளது.
4. இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேலா ஜெயவர்த்தனே நியமனம்
மஹேலா ஜெயவர்த்தனே இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. டி20 உலகக்கோப்பை; பட்லர் அதிரடி சதம், இங்கிலாந்து 163 ரன்கள் குவிப்பு!
டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.