கிரிக்கெட்

டோனியை சந்தித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்; கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி + "||" + T20 World Cup 2021: Young Pak Bowler Dhoni Elated to Meet One of His ‘Dream Players’ MS Dhoni

டோனியை சந்தித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்; கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி

டோனியை சந்தித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்; கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி
பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி, தோனியை சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
துபாய்,

இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் அணி வீரர்களான சோயிப் மாலிக், பாபர் அசாம் மற்றும் சிலருடன் இந்திய ஆலோசகர் டோனி கலந்துரையாடினார்.

இதன் பின்னர் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானியுடன் டோனி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனை டுவிட்டரில் பகிர்ந்த ஷாநவாஸ் தஹானி, தனது மரியாதைக்குரிய வீரர்களுள் ஒருவரான டோனியை சந்திக்கும் தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாகவும்,  பாகிஸ்தானின் வெற்றி மற்றும் டோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.