டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி


டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி
x
தினத்தந்தி 28 Oct 2021 5:39 PM GMT (Updated: 28 Oct 2021 5:39 PM GMT)

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

துபாய்,

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. துவக்க வீரர் டேவிட் வார்னர் 65 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 ரன்களும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். அதன்பின்னர் ஸ்டீவன் ஸ்மித் (28 ரன்கள்), ஸ்டாய்னிஸ் 16 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா வெற்றியை எட்டியது.

3 ஓவர்களில் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இலங்கை அணி சார்பில் ஹசரங்கா, 2 விக்கெட்களையும், தசுன் ஷனகா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Next Story