கிரிக்கெட்

முகமது ஷமியை விமர்சித்தவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள்: கோலி கருத்து + "||" + Virat Kohli slams 'spineless people' for abusing Mohammed Shami

முகமது ஷமியை விமர்சித்தவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள்: கோலி கருத்து

முகமது ஷமியை விமர்சித்தவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள்: கோலி கருத்து
முகமது ஷமியை விமர்சித்தவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் என விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
துபாய், 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பந்து வீச்சே (3.5 ஓவர்கள் பந்து வீசி 43 ரன்கள் வழங்கினார்) காரணம் என்று கூறி அவரை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்ததுடன், கடுமையான வார்த்தைகளால் இழிவுப்படுத்தினர். மதரீதியாக அவரை விமர்சித்ததுடன் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கருத்துகளை பதிவிட்டனர். 

இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலியிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், 
‘ஒருவரை அவரின் மதம் சார்ந்து தாக்கி பேசுவது தான் மனிதர்கள் செய்யும் மிக மோசமான காரியமாக இருக்க முடியும். சமூக வலைதளத்தில் பேசும் முதுகெலும்பற்ற இத்தகைய நபர்களை கண்டுகொள்ள தேவையில்லை. இவர்கள் நேரில் பேச தைரியம் இல்லாதவர்கள். மதம் என்பது புனிதமானது மற்றும் தனிநபர் சார்ந்தது. அதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது. முகமது ஷமி இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். முன்னணி பவுலராக இருக்கிறார். அதை எல்லாம் பார்க்காமல் கொச்சைப்படுத்தி பேசுபவர்களுக்காக எனது வாழ்நாளில் ஒரு நிமிடத்தை கூட நான் செலவிட விரும்பவில்லை. இந்திய வீரர்கள் அனைவரும் ஷமிக்கு துணை நிற்கிறோம். எங்களின் சகோதரத்துவம், நட்புறவை அசைத்து கூட பார்க்க முடியாது. ’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. வாமிகாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம்: விராட் கோலி- அனுஷ்கா சர்மா வேண்டுகோள்
வாமிகாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என விராட் கோலி- அனுஷ்கா சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2. மகளின் முகத்தை முதன் முறையாக காட்டிய அனுஷ்கா- வைரல் வீடியோ
விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியின் மகள் வாமிகாவின் புகைப்படம் முதன் முதலாக வெளியாகியுள்ளது.
3. டெஸ்ட் கிரிக்கெட் புதிய தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்
விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 10 இடங்கள் எகிறி 14-வது இடத்தை பெற்றுள்ளார்.
4. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து ரோகித் சர்மா கூறியது என்ன?
விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.
5. விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புகழாரம்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட்கோலி நேற்று அதிரடியாக அறிவித்தார்.