கிரிக்கெட்

இந்திய அணிக்கு இது கடினமான நேரம்: சச்சின் டெண்டுல்கர் + "||" + It was one of those matches where nothing worked out for India: Sachin Tendulkar

இந்திய அணிக்கு இது கடினமான நேரம்: சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணிக்கு இது கடினமான நேரம்: சச்சின் டெண்டுல்கர்
இந்திய அணிக்கு இது கடினமான நேரம் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்
மும்பை,

ஐ.சி.சி. இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ( பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து) தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 

இந்த நிலையில் இந்திய அணியின் மோசமான செயல்பாடுகள் குறித்து சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,   

 ‘நமது அணிக்கு இது கடினமான நாள். இதுபோன்ற நாட்கள் சில சமயங்களில் வரும். முயற்சி மேற்கொண்டாலும் எதுவும் சாதகமாக அமையவில்லை. அணியின் செயல்பாடுகள் குறித்து அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.  நமக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. எளிதாக ஒன்றிரண்டு ரன்கள் எடுக்க முடியாததால் நமது வீரர்கள் பெரிய ‘ஷாட்’ விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தனர். நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தங்களது வியூகத்தை களத்தில் சிறப்பாக செயல்படுத்தினார் வரும் போட்டிகளில் நமது அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்.’ என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் புதுமுக வீரர் ரவி பிஷ்னோய் தேர்வு
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்புகிறார்கள்.
2. மிடில் ஓவரில் சிறப்பாக செயல்பட வேண்டும்: பயிற்சியாளர் டிராவிட் பேட்டி
மிடில் ஓவரில் நமது அணி இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்தார்.
3. இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால்..? பும்ரா பதில்
இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
4. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 -வது டெஸ்ட் : பயிற்சியை தொடங்கிய இந்திய அணி..!
3 வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது.
5. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
இன்று நடந்த 2-வது அரைஇறுதி போட்டியில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின.