டி20 உலக கோப்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலாவதாக பேட்டிங்


டி20 உலக கோப்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலாவதாக பேட்டிங்
x
தினத்தந்தி 7 Nov 2021 10:02 AM GMT (Updated: 7 Nov 2021 10:02 AM GMT)

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .


அபுதாபி, 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று நடைபெறும்  ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது.
 
3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்து விடும்.

நியூசிலாந்து அணி தோற்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு உருவாகும். அதாவது இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமிபியாவை தோற்கடித்தால் அரைஇறுதிக்குள் நுழைந்து விடலாம். 

எனவே இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே  அதிகமாகியுள்ளது.

இரு அணி வீரர்களின் விவரம் ;

நியூசிலாந்து : கேன் வில்லியம்சன் (கேப்டன்) மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல்,  டெவன் கான்வே, ஜேம்ஸ் நீசம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரென்ட் பவுல்ட்

ஆப்கானிஸ்தான் ;  முகமது நபி (கேப்டன்) ,ஹஜ்ரத்துல்லா சசாய், முகமது ஷாசத், ரஹ்மானுல்லா குர்பாஸ், சட்ரான், குல்பதின் நாயப், கரீம் ஜனத், ரஷித் கான், நவீன்-உல்-ஹக், ஹமீத் ஹாசன், முஜீப் உர் ரஹ்மான்

Next Story