20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டை அமெரிக்காவில் நடத்த திட்டம்..?


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டை அமெரிக்காவில் நடத்த திட்டம்..?
x
தினத்தந்தி 14 Nov 2021 9:25 PM GMT (Updated: 2021-11-15T02:55:48+05:30)

2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. முயற்சித்து வருகிறது.

சிட்னி,

2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இணைந்து நடத்தும் உரிமத்தை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசிடம் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. முயற்சித்து வருகிறது. அமெரிக்காவில், கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் அங்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தினால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கும் தீவிர முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று ஐ.சி.சி. கருதுகிறது. 

தற்போது 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. 2024-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அணிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story