அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம்: ஸ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனை..!


அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம்: ஸ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனை..!
x
தினத்தந்தி 28 Nov 2021 10:16 AM GMT (Updated: 28 Nov 2021 10:16 AM GMT)

முதல் இன்னிங்ஸ்சில் சதம் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸ்சில் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றார்.

கான்பூர்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 345 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸ்சில் அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அபாரமாக விளையாடி சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பின்னர் இரண்டாம் இன்னிங்ஸ்சில் முன்னனி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்புடன் விளையாடி 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் ஒருவர் அறிமுக வீரராக களமிறங்கி முதல் இன்னிங்ஸ்சில் சதம் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸ்சில் அரைசதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றார். மேலும் அறிமுக போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்சிலும் ஐம்பதுக்கும் மேல் அடுத்த இந்தியர்களில் பட்டியலில் மூன்றாவதாக இடம்பிடித்தார்.

ஏற்கெனவே இந்தியாவின் சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட்டில்  65 மற்றும் 67*  ரன்களும், மற்றும் 1933-ம் ஆண்டு திலாவர் உசேன் இங்கிலாந்துக்கு எதிராக 59 மற்றும் 57 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story