கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் :தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உத்தேச பட்டியல்...? + "||" + IPL Cricket: Proposed list of retained players

ஐ.பி.எல் கிரிக்கெட் :தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உத்தேச பட்டியல்...?

ஐ.பி.எல் கிரிக்கெட் :தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உத்தேச பட்டியல்...?
எந்த அணி யாரை தக்க வைத்து கொண்டது என்பது குறித்து இன்று இரவு 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது.

அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களின் ஏலத்தில் 90 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும். ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்து கொண்டால், அவர்களின் 90 கோடி ரூபாய் கணக்கிலிருந்து 42 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும். அதுவே 3 வீரர்கள் என்றால் ரூ. 33 கோடி, 2 வீரர்கள் என்றால் ரூ.24 கோடி அல்லது ஒரு வீரர் மற்றும் தக்க வைத்து கொண்டது என்றால் ரூ.14 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிக்காக அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரைத் தக்கவைத்துள்ளதாகத் தெரிகிறது. இதர அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் உத்தேச  பட்டியல்  வெளியாகி உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ்:  தோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி
மும்பை:  ரோஹித் சர்மா, பும்ரா
கொல்கத்தா: சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர்
பெஙக்ளூர்:  விராட் கோலி, மேக்ஸ்வெல்
டெல்லி:  ரிஷப் பண்ட் , பிருத்வி ஷா, அக்‌ஷர் படேல், நோர்கியா
சன்ரைசர்ஸ்: கேன் வில்லியம்சன் 
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன்

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் வேறொரு அணிக்குத் தலைமை தாங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்தமுறை எந்தவொரு வீரரையும் பஞ்சாப் அணி தக்கவைக்க விரும்பவில்லை என்றொரு தகவல் வெளியாகியுள்ளது. 

எந்த அணி யாரை தக்க வைத்து கொண்டது என்பது குறித்து இன்று இரவு 9.30  மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல் கிரிக்கெட்: அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் நேற்று வெளியானது.
2. ஐ.பி.எல் கிரிக்கெட் : டோனி, ஜடேஜா உள்பட 4 வீரர்களை தக்கவைத்தது சி.எஸ்.கே அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி ,ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது
3. ஐ.பி.எல் கிரிக்கெட் : ரோகித் சர்மா உட்பட 4 வீரர்களை தக்கவைத்தது மும்பை அணி
மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா ,பும்ரா ,பொல்லார்ட் ,சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்கவைத்துள்ளது
4. ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
5. ஐபிஎல் கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
14-வது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.