இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேலா ஜெயவர்த்தனே நியமனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Dec 2021 1:24 AM GMT (Updated: 2021-12-14T06:54:48+05:30)

மஹேலா ஜெயவர்த்தனே இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இலங்கை கிரிக்கெட் அணிக்கும், அதன் உயர்திறன் மேம்பாட்டு மைய நிர்வாகத்துக்கும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், தேசிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அருமையான வாய்ப்பாகும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்காலத்தில் நிலையான வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகிறேன்" என்று ஜெயவர்த்தனே கூறினார்.

Next Story