கிரிக்கெட்

இந்திய அணி 5 பவுலர்களுடன் களம் இறங்க வாய்ப்பு : துணை கேப்டன் லோகேஷ் ராகுல் + "||" + Indian team likely to field with 5 bowlers: Lokesh Rahul, vice-captain of the Indian team

இந்திய அணி 5 பவுலர்களுடன் களம் இறங்க வாய்ப்பு : துணை கேப்டன் லோகேஷ் ராகுல்

இந்திய அணி 5 பவுலர்களுடன் களம் இறங்க வாய்ப்பு : துணை கேப்டன் லோகேஷ் ராகுல்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நாளை தொடங்குகிறது
செஞ்சூரியன், 

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் லோகேஷ் ராகுல் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடைசியாக இங்கு (2017-18-ம் ஆண்டு) விளையாடிய தொடரை விட இந்த முறை இன்னும் சிறப்பாக தயாராகி இருக்கிறோம். நானும், மயங்க் அகர்வாலும் அணிக்கு வலுவான தொடக்கம் தருவோம் என்று நம்புகிறேன். முதல் 30-35 ஓவர்களில் விக்கெட்டை இழக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறேன்.

பெரும்பாலான அணிகள் 5 பவுலர்களுடன் தான் போட்டியை தொடங்குகின்றன. ஏனெனில் ஒவ்வொரு அணியும் 20 விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகின்றன. டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஒரே வழி அது தான். நாங்களும் வெளிநாட்டு டெஸ்டுகளில் இந்த யுக்தியை கடைபிடித்து இருக்கிறோம். அத்துடன் 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் போது அவர்களின் பணிச்சுமை சற்று குறைகிறது. எனவே இந்த டெஸ்டில் நாங்கள் 5 பவுலர்களுடன் விளையாட வாய்ப்புள்ளது.

அஜிங்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் யாரை ஆடும் லெவனில் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வது மிகவும் கடினம். ரஹானே டெஸ்ட் அணியின் மிகவும் முக்கியமான வீரர். முக்கியமான கட்டங்களில் சிறப்பாக விளையாடி உள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக டெஸ்டிலேயே வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சதம் அடித்துள்ளார். இதே போல் விஹாரியும் அணிக்காக நன்றாக ஆடியுள்ளார். அதனால் இதில் முடிவு எடுப்பது கடினம்.

இங்குள்ள ஆடுகளங்களில் வேகமும், பவுன்சும் இருக்கும். ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது வித்தியாசமானது. சீக்கிரமாகவே தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விட்ட நாங்கள் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறோம்.

இவ்வாறு ராகுல் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. "இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது"- டேல் ஸ்டெயின்
பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஐதராபாத் வீரர் குறித்து டேல் ஸ்டெயின் பேசியுள்ளார்.
2. புரோ ஹாக்கி லீக் : இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
3. பெண்கள் உலகக்கோப்பை; ஸ்மிரிதி மந்தனா அபார சதம்!!
தொடக்கவீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபார சதத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது.
4. ஷேன் வார்னே மறைவிற்கு இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து இரங்கல்!
ஷேன் வார்னே மற்றும் ரோட் மார்ஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இந்திய அணி வீரர்கள் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
5. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
முதல் டெஸ்ட் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.