விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ‘புஷ்பா’ பாடலுக்கு நடனமாடிய பிராவோ


விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ‘புஷ்பா’ பாடலுக்கு நடனமாடிய பிராவோ
x
தினத்தந்தி 27 Jan 2022 1:57 AM GMT (Updated: 2022-01-27T07:27:10+05:30)

‘ஸ்ரீவல்லி’ எனும் பாடலில் வரும் நடனத்தை களத்திலேயே ஆடியபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

டாக்கா,

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தில் வரும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 

இந்த படத்தில் வரும் ‘ஸ்ரீவல்லி’ எனும் பாடலில் அல்லு அர்ஜூன் வித்தியாசமான நடனத்தை வெளிப்படுத்தியிருப்பார். இந்த நடனத்தை சில நாட்களுக்கு முன்பு டேவிட் வார்னர் நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

இந்த நிலையில், பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) போட்டியில் விளையாடிவரும் பிராவோ, போட்டியின்போது விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ‘ஸ்ரீவல்லி’ பாடலில் வரும் நடனத்தை களத்திலேயே ஆடியபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிராவோவின் இந்த நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பாடலுக்கு ஏற்கெனவே சுரேஷ் ரெய்னா மற்றும் கலீல் அகமது ஆகியோர் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.


Next Story