ரஞ்சி டிராபி: அறிமுக போட்டியிலேயே சதமடித்த யாஸ்துல்


ரஞ்சி டிராபி: அறிமுக போட்டியிலேயே சதமடித்த யாஸ்துல்
x
தினத்தந்தி 17 Feb 2022 10:15 AM GMT (Updated: 2022-02-17T15:45:23+05:30)

யாஸ்துல், டெல்லி அணிக்காக அறிமுக போட்டியில் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார்.

கவுகாத்தி,

முதல்தர போட்டியான ரஞ்சி டிராபியில் இன்று தமிழ்நாடு-டெல்லி அணிகள் கவுகாத்தியில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி டெல்லி அணி களகிறங்கியது. இந்த போட்டியில், ஜூனியர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் கேப்டன் யாஸ்துல் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.

தமிழ்நாடு பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட அவர், பந்துகளை அருமையாக பவுண்டரிக்கு விரட்டினார். அதிரடியாக விளையாடிய யாஸ்துல், 133 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் ரஞ்சி டிராபி தொடரில் அறிமுக போட்டியில் சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் அவர் இளம் வயதில் ரஞ்சி  டிராபி தொடரின் அறிமுக போட்டியில் சதமடித்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோருடன் இணைந்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 133 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.


Next Story