சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் எஸ்.என்.ஜெ. ஸ்பான்சர்ஷிப் நீட்டிப்பு


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் எஸ்.என்.ஜெ. ஸ்பான்சர்ஷிப் நீட்டிப்பு
x

ஒப்பந்தமானது 2022-ல் இருந்து 2024-ம் ஆண்டு வரை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எஸ்.என்.ஜெ. குழுமம் 2019-ம் ஆண்டு முதல் ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. 

இந்த ஒப்பந்தத்தை 2022-ல் இருந்து 2024-ம் ஆண்டு வரை மேலும் 3 ஆண்டுக்கு எஸ். என்.ஜெ. நீட்டித்துள்ளது. இந்த தகவலை சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் நேற்று தெரிவித்தார். 

சென்னை சூப்பர் கிங்சுடன் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக எஸ்.என்.ஜெ. குழும சேர்மன் எஸ்.என். ஜெயமுருகன் குறிப்பிட்டார்.


Next Story