மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி வெற்றி


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
x
தினத்தந்தி 11 March 2022 9:00 AM GMT (Updated: 2022-03-11T14:30:37+05:30)

பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

மவுண்ட் மவுங்கானு,

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9 ஆவது லீக் போட்டியில்  பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உல்வார்ட் 75 ரன்களும், சுனே லூவஸ் 62 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஒமைமா 65 ரன்களும், நிடா தார் 55 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 ரன்களில் வெற்றிபெற்றது.  பாகிஸ்தான் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. Next Story